திருப்பூர், காங்கேயன் நகரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் இன்று (06.02.2014), வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலைக் கட்டி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கோவில் புனரமைப்புப் பணிகள் முடித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த சன்னிதிகளுடன் மீனாட்சி, ஈஸ்வரர், பெருமாள், சனீஸ்வரர், நவக்கிரகங்களுக்கு சன்னிதி அமைக்கப்பட்டு, கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கடந்த 04.02.2014 -இல், இக்கோவிலில் யாகசாலை வழிபாடுகள் துவங்கின. 05.02.2014-லும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் ஸ்ரீ எஸ்.கே.ராஜா பட்டர் தலைமையிலான குழுவினர் வழிபாடுகளை நிகழ்த்தினர்.
முடிவில், வியாழக்கிழமை, கோவில் திருப்பணிக் குழுவினர் முன்னிலையில், அந்தணர்கள் வேதமோத கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், காங்கேயன் நகர், சத்தியமூர்த்தி நகர், ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர், அமர்ஜோதி வசந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தை அடுத்து மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றன; அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திரு. பி.சிவநாதன் தலைமையிலான திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
இவ்விழாவின் படங்கள் கீழே...
.

திருப்பூர், காங்கேயன் நகரில் உள்ள அருள்மிகு செல்வவிநாயகர் கோவிலில் வியாழக்கிழமை அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. |
கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோரில் ஒருபகுதி. |
No comments:
Post a Comment