Saturday, 16 November 2013

முக்கிய அறிவிப்பு

நமது குடியிருப்போர் சங்கம் சார்பில் இரவுக் காவலராக நியமிக்கப்பட்டிருந்த திரு.நீலகண்டன், வாகன விபத்தால் 13.11.2013, புதன் கிழமை இரவு காலமானார்.

கடந்த 05.11.2013 அன்று விபத்தில் காயமடைந்த நீலகண்டன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவருக்கு இரு மனைவிகள், இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.

சுகுமாறன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் 15.11.2013 அன்று சென்று வந்தனர். அப்போது, நீலகண்டனின் குடும்பத்தாரிடம் குடியிருப்போர் சங்கம் சார்பில்  ரூ. 6,000/- நிதியுதவி வழங்கப்பட்டது.

தற்போது புதிய இரவுக் காவலரை நியமிக்கும் முயற்சிகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

.

No comments:

Post a Comment