Saturday 30 July 2011

குறிக்கோளும் செயல்முறையும்


திருப்பூர் மாநகராட்சியின் 44 -வது வார்டுக்கு உள்பட்ட ஐஸ்வர்யா கார்டன்,  அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர், 40 -வது வார்டுக்கு உள்பட்ட காங்கேய நகர் பகுதிகள் அருகருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள். இந்தப் பகுதிகளில் சுமார் 150 வீடுகள் உள்ளன; 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இப்பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் கொடுக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், 'விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்' - Vivekanandha Residents Welfare Association - என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

2011, ஏப்ரல் 10 ல் துவக்கப்பட்ட இச்சங்கத்தில் இதுவரை 70க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். வீடுகளின் உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்போரும் எமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதன் மூலமாக, எமது பகுதியின் தேவைகள், பிரச்னைகளை நேரில் அறிந்து அதற்கான தீர்வு காண முயற்சிக்கிறோம். சங்கத்திற்கு சந்தா தொகை செலுத்துவதன் மூலமாக, ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புணர்வுடன் தமது பகுதியின் வளர்ச்சியில் பங்கேற்க முடிகிறது.

திருப்பூர் ஊரக காவல்நிலைய உதவியுடன் சமுதாய காவலர் (Community Police) அமைப்புடன் இணைந்து, எமது பகுதியில் இரவுநேரக் காவல் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

சாலையின் இருபுறமும் மரங்கள் வளர்த்து வருகிறோம். எமது பகுதியை குப்பைகளற்ற பகுதியாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. எமது பகுதிக்கு அரசின் நலத் திட்டங்களை அரசு நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு பெறுவதும் எங்கள் நோக்கம்.

குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளாக 7 பேரும், அவர்களுக்கு உதவ 18 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதந்தோறும் சந்தித்து வருகின்றனர்.

'ஒற்றுமையே வலிமை; தேசமே தெய்வம்' என்பதே எமது சங்கத்தின் அடிப்படை குறிக்கோள் ஆகும்.

No comments:

Post a Comment