Friday 20 April 2012

திருப்பூரில் திருட்டு பைக்கை மீட்ட குடியிருப்போர் சங்கம்



தினமணி செய்தி 

 

திருப்பூரில் திருட்டு  பைக்கை மீட்ட குடியிருப்போர் சங்கத்தினர் 


திருப்பூர், ஏப். 18:  திருப்பூரில் திருட்டு மோட்டார் சைக்கிளை விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மீட்டு புதன்கிழமை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூர், காங்கயம் சாலை, அமர்ஜோதிசத்யமூர்த்தி நகரில் விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் என்ற  அமைப்பு இயங்கி வருகிறது. அப்பகுதியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து இச்சங்கம் சார்பில் அங்கு இரவு ரோந்துப்  பணியில் ஈடுபடும் வகையில் சமுதாய காவல்படையை சேர்ந்த இருவரை நியமனம் செய்து  கண்காணிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன் இரவில் சமுதாயக் காவலர்கள் சண்முகம்,  வீரப்பன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தாராம். விசாரித்தபோது, அந்த நபர் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி விட்டாராம்.

இதையடுத்து குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மோட்டார் சைக்கிள் யாருடையது என கண்டறிந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் கருவம்பாளையத்தைச்  சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. புதன்கிழமை அமைப்பின் தலைவர் சிவநாதன் தலைமையில் நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளை திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் வழங்க ஏற்பாடு செய்தனர்.  

-தினமணி (19.04.2012) 
.


 

No comments:

Post a Comment