Showing posts with label அழைப்பிதழ். Show all posts
Showing posts with label அழைப்பிதழ். Show all posts

Saturday, 20 October 2012

ஆயுதபூஜை அழைப்பிதழ்



 20.10.2012


பெறுநர்:
அனைத்து உறுப்பினர்கள்,
விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்,
காங்கேய நகர், ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர்,
காங்கயம் சாலை, திருப்பூர்.

ஆயுதபூஜை அழைப்பிதழ்
அன்புடையீர், 

    வணக்கம்.

    நமது பகுதியின் முன்னேற்றத்துக்காக 'விவேகானந்தா  குடியிருப்போர் நலச் சங்கம்' அமைத்து,  நம்மால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு நல்கி வரும் அனைவருக்கும் நன்றி. 

    இம்மாதம்  நமது பகுதியில் உள்ள முட்புதர்கள் ரூ. 13,000 செலவில் அகற்றப்பட்டுள்ளன.  தவிர, சங்க அலுவலகத்தின் அருகில் உள்ள தனியார் இடத்தை அவர்களின்  அனுமதியுடன் சமன் செய்துள்ளோம். இந்த இடத்தில் காலை, மாலை வேளைகளில் நமது பகுதியில் உள்ள அனைவரும், குறிப்பாக பெண்கள் அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியும்.  தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நமது உடல்நலனுக்கு மிகவும் நல்லது. வரும் விஜயதசமி நாளில் இருந்து இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். 

   நமது பகுதியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இரவுக்காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இப்போது திரு. நீலகண்டன் என்ற ஒரு காவலர் மட்டும் பணியில் உள்ளார். அவரது அலைபேசி எண்: 85088 09096. தீபாவளிக்குப் பிறகு சந்தா வசூலைப் பொறுத்து கூடுதல் காவலரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். 

  வரும் 23.10.2012, செவ்வாய்க்கிழமை, காலை 8.00 மணியளவில், நமது VRWA சங்க அலுவலகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கு தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். 

  நன்றி.

நகல்: அலுவலக அறிவிப்புப் பலகை.


Monday, 5 September 2011

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா: முழு தொகுப்பு


விவேகானந்தா  குடியிருப்போர்  நலச்  சங்கத்தின் சமுதாயக் காவல் மையம்  திறப்பு விழா 10.08.2011 அன்று  நமது பகுதியில் நடைபெற்றது.  

அந்த நிகழ்வின் அழைப்பிதழ், செய்தி, புகைப்படங்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

காண்க:

விழா அழைப்பிதழ்

சமுதாயக் காவல் மையம் திறப்புவிழா குறித்த அறிவிப்பு

சமுதாய காவல் மையம் திறப்பு விழா (தினமணி) செய்தி

நமது தளத்தில் வெளியான செய்தி

திறப்பு விழா புகைப்படங்கள்: தொகுப்பு- 1 

திறப்பு விழா புகைப்படங்கள்: தொகுப்பு- 2

திறப்பு விழா புகைப்படங்கள்: தொகுப்பு- 3

திறப்பு விழா புகைப்படங்கள்: தொகுப்பு- 4

Sunday, 14 August 2011

சுதந்திர தின விழா அழைப்பிதழ்




நாள்                        :  15.08.2011,  திங்கள்கிழமை


நேரம்                      :  சரியாக காலை 8.00 மணி


தலைமை            :  திரு. P.செல்லமுத்து 
                                       துணைத் தலைவர்வி.கு.. சங்கம்.


முன்னிலை         :  திருK.பாலசுப்பிரமணியம் 
                                        துணைத் தலைவர்வி.கு.. சங்கம்.


வரவேற்புரை          திரு. S. சுந்தரம் 
                                           பொருளாளர், வி.கு..சங்கம்  


தேசியக் கொடியேற்றம் :  திருR.முத்துவேலு
                                           தலைமை ஆசிரியர் (ஓய்வு


விழா உரை         :  திரு. P.சிவநாதன்
                                         தலைவர்வி.கு.. சங்கம்.

நன்றியுரை            :  திரு. L.ராமசந்திரன் 
                                         துணை செயலாளர், வி.கு..சங்கம். 




அமுத மொழி

இந்தியா எழுச்சி பெறும் - உடல் பலத்தால் அல்ல, ஆன்மிக பலத்தால்; அழிவின் சின்னத்தால் அல்ல, அமைதியென்னும் கொடியால். இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்கு செவி சாய்ப்பீர்களா?

... முழு வேலையும் உங்கள் தோள்மீது இருப்பதாக எண்ணுங்கள். எனது தாய்நாட்டு இளைஞர்களே, இதை சாதிப்பதற்காக பிறந்தவர்கள் என்று நினையுங்கள். களத்தில் இறங்குங்கள்!                                                                              
 -சுவாமி விவேகானந்தர்.


Saturday, 30 July 2011

சமுதாயக் காவல் மையம் திறப்புவிழா அழைப்பிதழ்


நமது சங்கம்  வரும் 10.08.2011  அன்று நடத்தவுள்ள 
சமுதாயக் காவல் மையம்  திறப்புவிழா  மற்றும் சுதந்திர தின விழா அழைப்பிதழ். 

அழைப்பிதழைச்  சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்.





அனைவரும் வருக!  

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா அழைப்பிதழ் விபரம்



VRWA சமுதாயக் காவல்மைய சோதனைச் சாவடி


அன்புடையீர்,


வணக்கம்.

    நமது பகுதியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பைக் கருதி 'விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்' துவக்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இது வரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு சிறப்புற இயங்கி வரும் நமது சங்கம், இப்போது சமுதாயக் காவல் மையத்தின்  திறப்பு விழாவை ஆகஸ்ட் 10 ம் தேதி நடத்துகிறது.

   கடந்த மூன்று மாதங்களாகஎமது பகுதியில்  இரவுநேரக்   காவல் பணிசமுதாயக் காவல்  அமைப்பால் (COMMUNITY POLICE) செம்மையாக நடந்து வருகிறது. இதற்கென, சமுதாயக் காவல் மைய சோதனைச் சாவடி கட்டப்பட்டுள்ளது.

      இதன் துவக்க விழாவில், திருப்பூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. V.பாலகிருஷ்ணன் IPS அவர்களும், காவல் துணை கண்காணிப்பாளர்  உயர்திரு. R.ராஜாராம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.   இவ்விழாவில், திருப்பூர் மாநகர மன்ற உறுப்பினர் திருSPA. சேட் (ஷாஜஹான் அவர்களும் நல்லூர் நகராட்சி துணைத் தலைவர் திருமதி J.நிர்மலா தேவி அவர்களும் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.

    அடுத்து, நமது தாய்த் திருநாட்டின் சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15  ம் தேதி நமது பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாக்களில் தாங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

     நாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் நமது பகுதி மேம்படும். நமது சங்கத்தின் வளர்ச்சிக்கு தங்கள் மேலான ஆலோசனைகளையும் நல்லாதரவையும்  நல்குமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
-நிர்வாகிகள்
--------------------------------------------------------------------- 
நிகழ்ச்சி  நிரல்

நாள்         :  10.08.2011, புதன்கிழமை
நேரம்        :  சரியாக மாலை 5.00 மணி
இடம்        :  சமுதாயக் காவல் மையம்  
                       அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர்.
தலைமை    திருS.P.A. சேட் (ஷாஜஹான் 
                   41 வது வார்டு மாமன்ற உறுப்பினர்,
                திருப்பூர் மாநகராட்சி.
முன்னிலை  திருமதி. J. நிர்மலா தேவி  
              துணைத் தலைவர்நல்லூர் நகராட்சி.
வரவேற்புரை : திரு. P.சிவநாதன்
              தலைவர்,
              விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்.

பெயர்ப்பலகை திறப்புவாழ்த்துரை:
              உயர்திரு. R.ராஜாராம்
              காவல் துணை கண்காணிப்பாளர், திருப்பூர்.

சமுதாயக் காவல் மையம் திறப்பு, சிறப்புரை:
              உயர்திரு. V.பாலகிருஷ்ணன், IPS
              மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர்.
நன்றியுரை  :  திரு. S.சுந்தரம்
              பொருளாளர்,
              விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்.


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்... 


.