Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

Monday, 3 March 2014

புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2

நமது பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய இல்லத்தின் புதுமனை புகுவிழா 03.03.2014, திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படத்தை திரு.ஆர்.சிவசுப்பிரமணியன் தம்பதியருக்கு பரிசாக சங்க நிர்வாகிகள் திரு. பன்னீர்செல்வம், திரு.இரா.முத்துவேலு ஆகியோர் வழங்கினர். அதன் புகைப்படப் பதிவு கீழே...


Saturday, 1 March 2014

அறிவிப்பு பலகைகள்

விவேகானந்தா குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், குடியிருப்புப் பகுதிகளின் பெயர்ப்பலகைகளும், இரவுக்காவல் விதிமுறைகள் குறித்த விளம்பரப்பலகையும், வி.கு.ந.சங்கத்தின் பெயர்ப்பலகையும் அண்மையில் திறக்கப்பட்டுள்ளன.

அவற்றின் வடிவங்கள் இங்கே....





 


Thursday, 6 February 2014

செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

திருப்பூர், காங்கேயன் நகரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் இன்று (06.02.2014), வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோவிலைக் கட்டி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கோவில் புனரமைப்புப் பணிகள் முடித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த சன்னிதிகளுடன் மீனாட்சி, ஈஸ்வரர், பெருமாள், சனீஸ்வரர், நவக்கிரகங்களுக்கு சன்னிதி அமைக்கப்பட்டு, கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கடந்த 04.02.2014 -இல், இக்கோவிலில் யாகசாலை வழிபாடுகள் துவங்கின. 05.02.2014-லும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் ஸ்ரீ எஸ்.கே.ராஜா பட்டர் தலைமையிலான குழுவினர் வழிபாடுகளை நிகழ்த்தினர்.

முடிவில், வியாழக்கிழமை, கோவில் திருப்பணிக் குழுவினர் முன்னிலையில், அந்தணர்கள் வேதமோத கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், காங்கேயன் நகர், சத்தியமூர்த்தி நகர்,  ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர், அமர்ஜோதி வசந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தை அடுத்து மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றன; அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திரு. பி.சிவநாதன் தலைமையிலான திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர். 

இவ்விழாவின் படங்கள் கீழே...

திருப்பூர், காங்கேயன் நகரில் உள்ள அருள்மிகு செல்வவிநாயகர் கோவிலில் வியாழக்கிழமை அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோரில் ஒருபகுதி.
.


Monday, 11 November 2013

புதிய உறுப்பினருக்கு நல்வரவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு (APRO) அலுவலராகப் பணிபுரியும் திரு. பாலாஜி, நமது பகுதியில், அமர்ஜோதி  சத்தியமூர்த்தி நகரில் வீடு வாங்கிக் குடிபுகுந்துள்ளார்.

அவருக்கு நமது சங்கத் தலைவர் திரு. சிவநாதன், பொருளாளர் திரு. சுந்தரம், துணை செயலாளர் திரு பன்னீர்செல்வம் ஆகியோர் சுவாமி விவேகானந்தர் படத்தைப் பரிசாக வழங்கியபோது (10.11.2013) எடுத்த படம் கீழே...

.

Wednesday, 24 October 2012

சங்கத்தின் அரும்பணி: நடைப்பயிற்சி மைதானம் ஏற்பாடு

விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், அமர்ஜோதி சத்தியமுர்த்தி நகரில்  உள்ள தனியாருக்குச் சொந்தமான நான்கு மனைகளில் (மனை உரிமையாளர்களின் ஒப்புதலுடன்) குவிந்திருந்த குப்பைகள், கற்களை அகற்றி, அங்கு நமது பகுதிப் பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மைதானத்தில் நடந்த நிலம் சமன் படுத்தும் பணியின்  படங்கள்  கீழே...






சங்கத்தின் அரும்பணி: முட்புதர்கள் அகற்றம்

விவேகானந்தா  குடியிருப்போர்  நலச் சங்கம் சார்பில், நமது பகுதியில் காலி இடங்களில் படர்ந்திருந்த  வேலி காத்தான் முட்புதர்கள் அனைத்தும் கடந்த அக்டோபார் 12 ம் தேதி  அகற்றப்பட்டன. இதற்காக சங்கம் சார்பில்  ரூ. 6500 செலவு செய்யப்பட்டது.

முட்புதர்கள் அகற்றப்பட்டது தொடர்பான படங்கள் இங்கே உள்ளன...











நமது அலுவலகம் - படங்கள்

 வி.கு.ந.சங்க அலுவலக கட்டடம்- தூரப்பார்வையில்...

வி.கு.ந. அலுவலக கட்டடம்- கிட்டப்பார்வையில்...


Saturday, 21 April 2012

வி.கு.ந.சங்கத்தின் நற்பணி

மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வாகனத்துடன் அதன் உரிமையாளர்
(வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்) திரு. ராமசாமி,
சமுதாயக் காவலர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்.


விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நமது பகுதியின் பாதுகாப்புக்காக சமுதாயக் காவல் அமைப்பு சார்பில் இரு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக நாம் மாதந்தோறும் ரூ. 13,000 ஊதியம் வழங்கி வருகிறோம். இந்த பாதுகாவல் பணியால், நமது பகுதியின் இரவு நேர பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்த சமுதாய காவல் பணியின் மற்றொரு நன்மை அண்மையில் உணரப்பட்டது. கடந்த வாரம் 15.04.2012 ஞாயிற்றுக் கிழமை இரவு 2 மணியளவில், காங்கேய நகர் முதல் வீதியில் இரு சக்கர வாகனத்தைத் தள்ளியபடி ஒருவர் சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் கொண்டு நமது சமுதாயக் காவலர்கள் அவரை விசாரிக்க நெருங்கியுள்ளனர். உடனே, அந்த இளைஞர் தான் தள்ளிவந்த வாகனத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அப்போதுதான் அந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும், அதைத் தள்ளி வந்தவர் திருடர் என்பதும் தெரிய வந்தது.

அந்த வாகனம் டி.வி.எஸ்.  எக்ஸெல் ஹெவி டூட்டி (பதிவு எண்: TN 39 AP 4881). ஆனால் அதன் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. 

எனினும், காங்கேய நகரில் மீட்கப்பட்டதால், நமது பகுதியைச் சேர்ந்தவர்களின் வண்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், நாம் வீடு வீடாக விசாரித்தோம். ஆனால், எங்கும் வாகனம் காணாமல் போனதாக தகவல் இல்லை. இதையடுத்து பதிவு எண்ணைக் கொண்டு வாகன உரிமையாளரை அறிய முயன்றோம்.

இதனிடையே,  அந்த வாகனத்தில் கிடந்த ஒரு துண்டுக் காகிதத்தில் கிடைத்த தெளிவற்ற மொபைல் எண் நமக்கு துப்பாகக் கிடைத்தது. அதில் கடைசி எண் தெளிவில்லாமல் இருந்தது. எனவே கடைசி எண்ணை மாற்றி மாற்றி அழைத்துப் பார்த்ததில், பலர் பேசினர். இறுதியில் வாகன் உரிமையாளரே பேசினார்.

கருவம்பாளையத்தைச் சேர்ந்த திரு. P.R.ராமசாமி என்பவரது வாகனம் வீட்டின் முன்பு பூட்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் காணமல் போனதும், அது தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்திருந்ததும் தெரிய வந்தது. அவர் தனது வாகனப் பதிவேட்டுடன் வந்து தனது வாகனம் தான் என்பதை உறுதிப் படுத்தினார்.

இதையடுத்து, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில்  18.04.2012 புதன் கிழமை, மீட்கப்பட்ட வாகனம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) திரு ஈஸ்வரனிடம் நமது சங்கத் தலைவர் திரு பி.சிவநாதன் வாகனத்தை ஒப்படைத்தார்.

அதன்பிறகு, முறையான ஆய்வுக்குப் பின், வண்டியின் உரிமையாளரிடம் காவல்துறையினர் அந்த வாகனத்தை அதே நாளில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட வாகனத்தின் மதிப்பு : ரூ. 35 ஆயிரம் என்பது குறிப்பிடத் தக்கது.  

வாகனத்தைப் பெற்றுக் கொண்ட திரு. P.R.ராமசாமி, நமது சங்கத்துக்கு   21.04.2012, வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது தனது திருட்டு போன  வாகனத்தை  மீட்டு ஒப்படைத்த விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்துக்கும், சமுதாயக் காவல் அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் திரு சண்முகம், திரு வீரப்பன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். வண்டியை மீட்ட சமுதாயக் காவலர்கள் இருவருக்கும் வெகுமதியாக ரூ. 500 ரொக்கமும் அன்பளிப்பாக அவர் தந்து சென்றார். 

தனது வாகனத்தை மீட்ட வி.கு.ந. சங்கத்தின் சமுதாயக் காவலர்கள் திரு சண்முகம், திரு. வீரப்பன் ஆகியோருடன், வாகனத்தின் உரிமையாளர் கருவம்பாளையம் திரு பி.ஆர்.ராமசாமி.


இந்நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.  தலைவர் திரு பி.சிவநாதன், செயலாளர் திரு வ.மு.முரளி, செயற்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் பி.ராமசாமி, ஆர்.செல்வராஜ், ஆர்.பால்ராஜ், பி.முருகேசன் ஆகியோரும் அப்போது இருந்தனர். 

நமது பகுதியின் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்யப்பட சமுதாயக் காவலர் அமைப்பு, திருப்பூரின் வேறொரு பகுதியில் உள்ள ஒருவரது வாகனத்தை மீட்டுக் கொடுத்திருப்பது நமக்கு பெருமிதம் அளிப்பதாகும். இதனை திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு ஈஸ்வரன் பாராட்டினார். 


.

 

Monday, 5 September 2011

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா: முழு தொகுப்பு


விவேகானந்தா  குடியிருப்போர்  நலச்  சங்கத்தின் சமுதாயக் காவல் மையம்  திறப்பு விழா 10.08.2011 அன்று  நமது பகுதியில் நடைபெற்றது.  

அந்த நிகழ்வின் அழைப்பிதழ், செய்தி, புகைப்படங்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

காண்க:

விழா அழைப்பிதழ்

சமுதாயக் காவல் மையம் திறப்புவிழா குறித்த அறிவிப்பு

சமுதாய காவல் மையம் திறப்பு விழா (தினமணி) செய்தி

நமது தளத்தில் வெளியான செய்தி

திறப்பு விழா புகைப்படங்கள்: தொகுப்பு- 1 

திறப்பு விழா புகைப்படங்கள்: தொகுப்பு- 2

திறப்பு விழா புகைப்படங்கள்: தொகுப்பு- 3

திறப்பு விழா புகைப்படங்கள்: தொகுப்பு- 4

Sunday, 4 September 2011

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா: தொகுப்பு - 4

 விழா நிறைவில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
காவல்துறை அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட குழுப்படம்

சமுதாய காவல் மையம் முன்பு சமுதாயக் காவலர்கள்

இரவுக்காவலர் திரு பூபதிக்கு மழையுடை வழங்குகிறார் 
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்.
அருகில் சமுதாயக் காவலர் பொறுப்பாளர் திரு சண்முகம் (வலது)   

இரவுக்காவலர் திரு வேலுசாமிக்கு மழையுடை வழங்குகிறார் 
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்  

சமுதாயக் காவலர்களுடன்
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்   

விழாவில் நமது பகுதியின் பாதுகாப்பு  குறித்து விளக்குகிறார்
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்  

 விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதி

விழாவில் பங்கேற்றோரில் மறு பகுதி

சமுதாயக் காவல் அமைப்பால் வைக்கப்பட்ட
வரவேற்பு விளம்பரம்

----------------------------------------------




.

Saturday, 3 September 2011

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா: தொகுப்பு - 3

 VRWA சமுதாயக் காவல் மையத்தைத் திறந்துவைக்கிறார்
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்  

 சமுதாயக் காவல் மைய பதிவேட்டை ஆய்வு செய்கிறார்
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்  

VRWA பதிவேட்டில் கையொப்பம் இடுகிறார் 
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்   


 விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதி

 விழாவில் பங்கேற்றோரில் மறு பகுதி

 VRWA பெயர்ப்பலகையைத் திறந்துவைக்கிறார்
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்  

 VRWA பெயர்ப்பலகையைத் திறந்துவைக்கிறார்
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்  

VRWA சங்கப்  பெயர்ப்பலகை  திறப்பு முடிந்தவுடன் நிர்வாகிகளுடன் 
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்   

விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுடன்
சங்க நிர்வாகிகள்

----------------------------------------------
காண்க: சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா செய்தி

               விழா புகைப்படங்கள்:  தொகுப்பு-1
               
               விழா புகைப்படங்கள்:  தொகுப்பு- 2 

               விழா  புகைப்படங்கள்: தொகுப்பு- 4 

.            

Friday, 2 September 2011

சமுதாயக் காவல் மையம் திறப்புவிழா: தொகுப்பு-2

 வார்டு  உறுப்பினர்  திரு. ஷாஜகானுக்கு
நினைவுப்பரிசு வழங்குகிறார்
  சங்கத்தின்  துணை செயலாளர் திரு. எல்.ராமசந்திரன்

வார்டு உறுப்பினர் திரு.ஷாஜகானுக்கு
மாலை அணிவிக்கிறார்   
சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு கே.தமிழரசன்

 திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு. ஈஸ்வரனுக்கு
நினைவுப்பரிசு வழங்குகிறார்  
சங்கத்தின்  நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. ஆர்.செல்வராஜ்

திருப்பூர் தெற்கு  காவல் ஆய்வாளர் திரு. ஈஸ்வரனுக்கு
மாலை அணிவிக்கிறார்
சங்கத்தின்  நிர்வாகக்குழு உறுப்பினர்  திரு. எஸ்.முருகேஷ்  


திருப்பூர் ஊரக காவல் ஆய்வாளர்  திரு. வெற்றிவேந்தனுக்கு
நினைவுப்பரிசு    வழங்குகிறார்
சங்கத்தின்  நிர்வாகக்குழு உறுப்பினர்  திரு.பி.ராமசாமி


திருப்பூர் ஊரக  காவல் ஆய்வாளர் திரு. வெற்றிவேந்தனுக்கு 
மாலை அணிவிக்கிறார்
சங்கத்தின்  உறுப்பினர்  திரு. எம்.விஸ்வநாதன்

 திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆர்.ராஜாராமுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்  
சங்கத்தின் துணை செயலாளர்   திரு. எஸ்.கே.பன்னீர்செல்வம்

 திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆர்.ராஜாராமுக்கு
மாலை அணிவிக்கிறார்  
சங்கத்தின் துணைத் தலைவர்  திரு. பி.செல்லமுத்து  

விழாவில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதி

விழாவில் கலந்துகொண்ட மகளிரில் ஒரு பகுதி

---------------------------------------------