Saturday 30 July 2011

வி.கு.ந.சங்கத்தின் அறிவிப்பு - 1


வி.கு.ந. சங்கத்தின் அதிகாரப்பூர்வமான
முதல் கூட்டத்திற்கான அழைப்பிதழ்

அன்புடையீர்,

வணக்கம்.

  நமது பகுதியின் நலனுக்காக நாம் துவங்கியுள்ள விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தில் தாங்கள்   உறுப்பினராகி உள்ளது மகிழ்ச்சி  அளிக்கிறது. இதுவரை 80 க்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர் படிவம் நிரப்பி அளித்துள்ளனர்.

  நமது ஒற்றுமையின் பலனாக இப்போது இரவுக் காவலர்கள் இருவர் நியமிக்கப்பட்டு மாலை 6.00 மணி முதல் காலை  6.00 மணி வரை பாதுகாவல் பணி மேற்கொண்டு வருகின்றனர். காவல் பணிக்கென ஓர் அறை கட்டும் பணியும் நடந்து வருகிறது.

  தற்போது நமது அமைப்பின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவும், நமக்குள் நிர்வாகிகளை முடிவு  செய்யவும்   வேண்டியுள்ளது. இதற்காக ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் தாங்கள் தவறாது கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறோம்.

ஆலோசனைக்கூட்டம் விபரம்:
நாள்  :  10.05.2011,  செவ்வாய்க் கிழமை,
நேரம் :  மாலை 6.00  மணி.
இடம் :  திரு. பன்னீர்செல்வம் அவர்களது அலுவலக வளாகம்

  இக்கூட்டத்திற்கு வரும்போது மே மாத சந்தா தொகையான ரூ. 300  (சொந்த வீடு உள்ளவர்கள்) கொண்டுவந்து அதற்கென உள்ள பொறுப்பாளரிடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வாடகைக்கு குடியிருப்போருக்கான சந்தா விபரம் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்காவலர் அறை கட்டுமானப்பணி நன்கொடை மூலமாக தற்போது  நடந்து வருகிறது; இதுவரை சுமார் ரூ. 20  ஆயிரம் இதற்கென வசூலாகி உள்ளதுகட்டுமானப் பணிக்கு  நன்கொடை தர விரும்புவோரும் தரலாம்.

  ஓர் அமைப்பு என்பது அதன் அனைத்து   உறுப்பினர்களின் ஆர்வமான செயல்பாட்டால்தான் உற்சாகமாக இயங்க முடியும். நாம் அனைவரும் இணைந்து செயல்படும்போதுதான் நமது அமைப்பு வலுவானதாக மாறும். அப்போதுதான் நமது பகுதியின் பிரச்னைகளை நாமே களைய முடியும். நமது வீட்டின் அருகில் உள்ளவர்கள் இதுவரை சங்க உறுப்பினர் ஆகாமல் இருந்தால் அவர்களையும் உறுப்பினராக்குங்கள்.

  இந்தக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்று வழங்கும் ஆலோசனை நமது சங்கத்தை மேலும் வலுப்படுத்தும். நீங்கள் அளிக்கும் சந்தாத்  தொகை மூலமாகவே காவலர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளை செய்ய முடியும். உங்கள் ஆர்வமான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
-பொறுப்பாளர்கள்
07.05.2011

No comments:

Post a Comment