Saturday 30 July 2011

இரவுநேரக் காவல்பணி விதிமுறைகள்

VRWA

விவேகானந்தா குடியிருப்போர் நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள காங்கேய நகர், ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர் பகுதி மக்களின் இரவுநேரப்   பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், திருப்பூர் ஊரகக்   காவல் நிலையத்துடன் இணைந்து, சமுதாயக் காவலர் அமைப்பின் (COMMUNITY POLICE)  உதவியுடன் இரவுநேர ரோந்துடன் கூடிய காவல் பணி மேற்கொள்ளப்படுகிறது.

தினசரி இரவுக்காவலர்கள் இருவர் மாலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை பணியில் இருக்க வேண்டும். அவர்களுக்கு மாத ஊதியம் மாத ஊதியம் சங்கம் சார்பில், சமுதாயக் காவலர்களின் பொறுப்பாளரிடம் வழங்கப்படும்.

இரவுக்காவலர்களாக பணிபுரிபவர்களின் புகைப்படத்துடன் கூடிய அனுமதிக்கடிதம் சோதனைச்சாவடியில் அனைவர் பார்வைக்கும் படும்படி வைக்கப்பட வேண்டும்; மாற்று ஏற்பாடாக பணி புரிபவர்கள் குறித்தும் புகைப்படத்துடன் கூடிய விபரம் அளிக்கப்பட வேண்டும்.

இரவுக்காவலர்களாக வருபவர்கள் ஏதாவது காரணத்தால் விடுப்பு எடுத்தால் அதுகுறித்து சங்க நிர்வாகிகளிடம்  தகவல் தெரிவித்து, மாற்று ஏற்பாடாக பணிக்கு வருபவர் குறித்தும் சமுதாயக் காவலர்- பொறுப்பாளர் தெரியப்படுத்த வேண்டும்.

குடியிருப்போர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள காவல் சீருடையில், பாதுகாப்புக் கருவிகளுடன் (டார்ச் லைட், தடி, விசில், மொபைல் போன்), அவர்கள் பணியில் இருக்க வேண்டும்.

காவல் பணிக்காக நமது பகுதியின் மையப் பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப் பட்டுள்ளது. அங்கு காவலர்கள் இருக்க வேண்டும்; பணியின்போது காவலர்கள் உறங்குவது கூடாது.

தினசரி நான்கு முறை, 10.00 மணி, 12.00 மணி, 2.00 மணி, 4.00 மணி அளவில், மூன்று பகுதிகளையும் இணைக்கும் வகையில், அனைத்து சாலைகள், குறுக்கு சந்துகளை கவனிக்கும் வகையில், ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

தினசரி வருகைப் பதிவேடு, காவல் நிலைய பட்டா பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். இதனை சங்க நிர்வாகிகள் இரவுநேர ஆய்வில் சரிபார்ப்பார்கள்.

சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் குறித்து சோதனைச்சாவடியில் உள்ள சமுதாயக் காவலருக்கு குடியிருப்புவாசிகள் மொபைல் போனில் தகவல் கொடுத்தால், உடனே அங்கு செல்லத் தக்கவகையில் காவலர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இரவுக் காவலர்களின் வசதிக்காக தேநீர் வைத்துக்கொள்ள மின்சார சாதனமும் பாத்திரங்களும் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

இரவுக் காவலருக்கு அளிக்கப்பட்டுள்ள மொபைல் போன், டார்ச் லைட் ஆகியவை   எப்போதும் பயன்படுத்தத் தக்க நிலையில்சார்ஜ் செய்யப்பட்டு இருக்க வேண்டும்மொபைல் போன் மட்டும், பகல்நேரங்களில் சமுதாயக் காவலர்- பொறுப்பாளரிடம் இருக்க வேண்டும். பிற பாதுகாப்பு சாதனங்களை சங்க நிர்வாகியிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

சோதனைச்சாவடி அறையின் விளக்குகளை அணைத்து, அறையைப் பூட்டி சாவியை அதற்கான பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

இரவுக்காவல் பணி குறித்த மக்களின் அபிப்பிராயங்களை சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பணியை இரவுக்காவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் இரவுக்காவல் பணியை ஆய்வு செய்யவும் மேம்படுத்தவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவிற்கு ஒத்துழைப்பு அளித்து, சங்கம் சிறப்புற இயங்க சமுதாயக் காவலர்கள் உதவ வேண்டும்.

காவல் பணி குறித்த குறைபாடுகளை சமுதாயக் காவலர் அமைப்பின் பொறுப்பாளரிடம், சங்க நிர்வாகிகள் மட்டுமே கூற வேண்டும்.

காவல்நிலைய அதிகாரிகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தி, விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பை சமுதாயக் காவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த ஏற்பாடு, விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தாலும்  சமுதாயக் காவலர் அமைப்பாலும் ஏக மனதாகத் தீர்மானிக்கப்படுகிறது 

இப்படிக்கு

P.சிவநாதன்                         P.சண்முகம்
              தலைவர் (வி.கு.ந.சங்கம்)                   சமுதாயக் காவலர் பொறுப்பாளர்
நாள்: 12.07.2011

No comments:

Post a Comment